கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல்.
kETTinum uNTOr uRuti kiLainjarainITTi aLappatOr kOl
Clarance Rajeevan
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவனுக்கு நேரும் துன்பத்திலும் ஒரு பெரிய நன்மை உண்டு; அந்தத் துன்பமே தன் நண்பர்களின் உண்மைத் தன்மையையும் அவர்களின் அன்பையும் துல்லியமாக அளந்து காட்டும் சிறந்த அளவுகோலாக அமையும்.
• கேட்டினும் உண்டோர் உறுதி = ஒருவனுக்கு வரும் துன்பத்திலும் ஒரு நன்மை உண்டு,• கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் = அது நண்பர்களின் உண்மைத் தன்மையை அளந்து காட்டும் அளவுகோலாகும்.
Murugaa simple commentary
There is a great benefit even in the suffering that happens to a person; that suffering itself becomes an excellent measuring rod that accurately measures and shows the true nature of one's friends and their affection.
• Even in ruin there is a benefit = There is a benefit even in the suffering that comes to a person,• A rod that extends and measures friends = It is a measuring rod that measures and shows the true nature of friends.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.
பரிமேலழகர்
கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் - ஒருவனுக்குக் கேடு என்பது தன் நட்டாராகிய புலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு - ஆகலின் அதன்கண்ணும் அவனால் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு. (தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார், பின் கேடு வந்துழிச் செயல் வேறுபடுதலின், அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பதுபற்றிக் கேட்டினைக் கோலாக்கியும்,அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின், அவ்வறிவை 'உறுதி' என்றும் கூறினார். கிளைஞர்: ஆகுபெயர், இஃது ஏகதேச உருவகம். இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.)
Parimelazhagar
A rod that stretches out and measures friends, adversity to a man is a rod that measures without remainder the fields that are his friends; even in adversity there is a benefit, therefore even in that there is a good knowledge to be gained by him. (Because those who went along in the time of wealth without it appearing outwardly even though the boundaries of their respective friendships had shrunk, later when adversity comes, differ in their actions, considering that those are defined by that adversity, he made adversity a measuring rod, and because when one measures and knows them by it, one accepts only those who are true, he also called that knowledge 'a benefit'. Friends: metonymy, this is a partial metaphor. By these four verses have been stated the manner of examining, and who should be befriended when examined.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.
Meaning in English
Ruin itself one blessing lends: 'Tis staff that measures out one's friends

