Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 795

பொருட்பால்அங்கவியல்80. நட்பாராய்தல்

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறியவல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

azhassolli alla tiTittu vazhakkaRiyavallArnaT pAyntu koLal

Darsha Subramaniyan

பொருள் / உரை

முருகா எளிய உரை

தவறு செய்ய நினைக்கும்போது உள்ளம் வருந்துமாறு சொல்லித் தடுத்து, தவறு செய்துவிட்டால் கண்டித்துத் திருத்தி, நல்வழிகளை அறிய வைக்க வல்ல சான்றோரின் நட்பை ஆராய்ந்து தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

• அழச்சொல்லி அல்லது இடித்து = தவறு செய்யும்போது மனம் வருந்தச் சொல்லித் தடுத்துக் கண்டித்து,• வழக்கறிய வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் = நன்னெறி வழக்குகளைக் கற்பிக்கும் ஆற்றல்மிக்கவரின் நட்பை ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

மு.வரதராசன்

நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.

பரிமேலழகர்

அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக்கருதின் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து - செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக் கொள்க. ('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.)

சாலமன் பாப்பையா

நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.

Meaning in English

Make them your chosen friend whose words repentance move, With power prescription's path to show, while evil they reprove

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout