குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
kuTippiRantu tankaN pazhinANu vAnaikkoTuttum koLalvENTum naTpu
திருக்குறள் / THIRUKKURAL
பொருள் / உரை
முருகா எளிய உரை
நற்பண்புகள் கொண்ட நற்குடியில் பிறந்து, பழிச்சொல்லுக்கு அஞ்சி அறவழியில் நடக்கும் உத்தமனின் நட்பை, எதனைக் கொடுத்தாவது அல்லது தியாகம் செய்தாவது தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
• குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவானை = நற்குடியில் பிறந்து பழிக்கு அஞ்சி வாழ்பவனை,• கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு = விலை கொடுத்தாவது அவனது நட்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மு.வரதராசன்
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.
பரிமேலழகர்
குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - உயர்ந்த குடியின்கண் பிறந்து தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது.(குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியைஅஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம், இவைஇரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலை கொடுத்தும் கொள்கஎன்பதாம்.)
சாலமன் பாப்பையா
நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
Meaning in English
Who, born of noble race, from guilt would shrink with shame, Pay any price so you as friend that man may claim





