Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 793

பொருட்பால்அங்கவியல்80. நட்பாராய்தல்

குணமும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்பு.

kuNanum kuTimaiyum kuRRamum kunRAinanum aRintiyAkka naTpu

Venkat Prabhu

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவருடன் நட்புக் கொள்ளும்போது அவரது நற்குணங்களையும், குடும்பப் பாரம்பரியத்தையும், அவரிடமுள்ள குறைகளையும், அவர் சார்ந்திருக்கும் சுற்றத்தாரின் தன்மையையும் நன்கு ஆராய்ந்து அறிந்தே நட்புக் கொள்ள வேண்டும்.

• குணமும் குடிமையும் குற்றமும் = ஒருவனது நற்குணங்களையும், குடிப்பிறப்பையும், அவனிடமுள்ள குற்றங்களையும்,• குன்றா இனனும் அறிந்து நட்பு யாக்க = அவனது குறைவற்ற சுற்றத்தாரின் இயல்பையும் நன்கு ஆராய்ந்தறிந்து நட்புக் கொள்ள வேண்டும்.

மு.வரதராசன்

ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.

பரிமேலழகர்

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க -அவனோடு நட்புச் செய்க. (குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இனனும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பார் 'அறிந்து யாக்க' என்றும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.

Meaning in English

Temper, descent, defects, associations free From blame: know these, then let the man be friend to thee

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout