Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 792

பொருட்பால்அங்கவியல்80. நட்பாராய்தல்

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும்.

AyntAyntu koLLAtAn kENmai kaTaimuRaitAnsAm tuyaram tarum

Sivaganga

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவரது குணங்களையும் செயல்களையும் திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்த்து நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பானது முடிவில் அவனே சாவதற்குக் காரணமான பெருந்துயரத்தையும் அழிவையும் கொண்டுவந்து தந்துவிடும்.

• ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை = மீண்டும் மீண்டும் ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனது நட்பு,• கடைமுறை தான்சாம் துயரம் தரும் = முடிவில் அவனே சாவதற்குக் காரணமான பெருந்துயரத்தைத் தரும்.

மு.வரதராசன்

ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.

பரிமேலழகர்

ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக்கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாகிய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும். ('கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு வரும் பகைமையெல்லாம் தன் மேலவாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.

Meaning in English

Alliance with the man you have not proved and proved again, In length of days will give you mortal pain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout