Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 790

பொருட்பால்அங்கவியல்79. நட்பு

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.

inaiyar ivaremak kinnamyAm enRupunaiyinum pullennum naTpu

Punya Selvamuruganantham

பொருள் / உரை

முருகா எளிய உரை

'இவர் எனக்கு இவ்வளவு அன்பானவர்; நானும் இவருக்கு இத்தகைய நன்மை செய்தேன்' என்று தமக்குள் வேற்றுமை காட்டிப் புகழ்ந்து பேசினாலும், அந்த நட்பின் உயரிய பெருமை குன்றி அற்பமாகிவிடும்.

• இனையர் இவரெமக்கு இன்னம் யாமென்று = இவர் எமக்கு இத்தகையவர், யாம் இவருக்கு இத்தகையோம் என்று,• புனையினும் புல்லென்னும் நட்பு = புனைந்து புகழ்ந்து பேசினாலும் நட்பு தன் சிறப்பை இழந்துவிடும்.

மு.வரதராசன்

இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.

பரிமேலழகர்

இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும் - இவர் நமக்கு இத்துணை யன்பினர், யாம் இவர்க்கு இத்தன்மையம் என்று ஒருவரையொருவர் புனைந்து சொல்லினும்; நட்புப் புல்லென்னும் - நட்புப் புல்லிதாய்த் தோன்றும். ('இவர்க்கு' என்பது வருவிக்கப்பட்டது. தாம் அவர் என்னும் வேற்றுமையின்றி வைத்துப் புனைந்துரைப்பினும் வேற்றுமையுண்டாம் ஆகலின், 'நட்புப் புல்லென்னும்' என்றார். இவை ஐந்து பாட்டானும் நட்பினது இலக்கணம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.

Meaning in English

Mean is the friendship that men blazon forth, 'He's thus to me' and 'such to him my worth'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout