நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
naTpiRku vIRRirukkai yAteniR koTpinRiollumvAy UnRum nilai
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
நட்பின் உன்னதமான நிலை எதுவென்றால், எக்காலத்திலும் உள்ளத்தில் வேறுபாடு கொள்ளாமல், தன்னால் இயன்ற வழிகளிலெல்லாம் தளர்ச்சியுறும் நண்பனைத் தாங்கிப் பிடித்துத் தூக்கி நிறுத்துவதேயாகும்.
• நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் = நட்பின் உன்னதமான அரியணை நிலை எதுவென்றால்,• கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை = உள்ளம் மாறாமல் முடிந்த வழிகளிலெல்லாம் நண்பனைத் தாங்கி நிறுத்தும் நிலையாகும்.
மு.வரதராசன்
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
பரிமேலழகர்
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் - நட்பினுக்கு அரசிருக்கை யாதெனின்; கொட்பு இன்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - அஃது எஞ்ஞான்றும் திரிபின்றி இயலும் எல்லையெல்லாம் அறம் பொருள்களில் தளராமைத் தாங்கும் திண்மை. (ஒரு ஞான்றும் வேறுபடாது மறுமை இம்மைகட்கு உறுதியாய அறம்பொருள்களில் தளர்ந்துழி அத்தளர்ச்சி நீக்கி அவற்றின் கண் நிறுத்துவதற்கு மேல் ஒரு செயலும் இன்மையின், அதனை நட்பிற்கு முடிந்த எல்லை என்றார்.)
சாலமன் பாப்பையா
நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.
Meaning in English
And where is friendship's royal seat? In stable mind, Where friend in every time of need support may find





