Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 788

பொருட்பால்அங்கவியல்79. நட்பு

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.

uTukkai izhantavan kaipOla AngkEiTukkaN kaLaivatAm naTpu

Vasudev Krishna

பொருள் / உரை

முருகா எளிய உரை

அணிந்த ஆடை நழுவும்போது கை உடனே விரைந்து சென்று மானத்தைக் காப்பது போல, நண்பனுக்குத் துன்பம் வந்த கணத்திலேயே விரைந்து சென்று அவனது துன்பத்தைப் போக்கிக் காப்பதே மெய்யான நட்பாகும்.

• உடுக்கை இழந்தவன் கைபோல = ஆடை நழுவும் போது மானத்தைக் காக்க கை தானாக விரைந்து செல்வது போல,• ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு = நண்பனுக்குத் துன்பம் வந்த கணத்திலேயே உடனே போக்கிக் காப்பதே நட்பாகும்.

மு.வரதராசன்

உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

பரிமேலழகர்

உடுக்கை இழந்தவன் கைபோல - அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி அவ்விளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம் - நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி அப்பொழுதே சென்று உதவி அதனைக் களைவதே நட்பாவது. (அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின், அவ்விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில் உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல் ஏற்பட்டது.)

சாலமன் பாப்பையா

பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

Meaning in English

As hand of him whose vesture slips away, Friendship at once the coming grief will stay

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout