Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 786

பொருட்பால்அங்கவியல்79. நட்பு

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு.

mukanaka naTpatu naTpanRu nenjsattakanaka naTpatu naTpu

Premji Amaran

பொருள் / உரை

முருகா எளிய உரை

நேரில் காணும்போது முகத்தில் மட்டும் போலிப் புன்னகை காட்டிப் பழகுவது உண்மையான நட்பாகாது; நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து அன்பினால் உள்ளமும் மலர நேசித்துப் பழகுவதே மெய்யான நட்பாகும்.

• முகநக நட்பது நட்பன்று = முகத்தில் மட்டும் போலிப் புன்னகை காட்டிப் பழகுவது நட்பல்ல,• நெஞ்சத்து அகநக நட்பது நட்பு = நெஞ்சின் ஆழத்திலிருந்து உள்ளம் மலர நேசிப்பதே மெய்யான நட்பாகும்.

மு.வரதராசன்

முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.

பரிமேலழகர்

முகம்நக நட்பது நட்பு அன்று - கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு - அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது.(நெஞ்சின்கண் நிகழ்வதனை 'நெஞ்சு' என்றார்.இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.)

சாலமன் பாப்பையா

பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

Meaning in English

Not the face's smile of welcome shows the friend sincere, But the heart's rejoicing gladness when the friend is near

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout