Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 782

பொருட்பால்அங்கவியல்79. நட்பு

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு.

niRainIra nIravar kENmai piRaimatippinnIra pEtaiyAr naTpu

Vignesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

நற்குணமும் அறிவும் கொண்ட சான்றோருடன் கொள்ளும் நட்பு வளர்பிறை போல நாளுக்கு நாள் பெருகி வளரும்; ஆனால் அறிவற்ற கீழ்மக்களுடன் கொள்ளும் நட்போ நாளுக்கு நாள் தேய்ந்து மறைந்து அழியும்.

• நீரவர் கேண்மை பிறை நிறைநீர = அறிவுடையாரின் நட்பு வளர்பிறை போல நாளும் வளரும்,• பேதையார் நட்பு மதிப் பின்னீர = அறிவற்றோரின் நட்பு தேய்பிறை போல நாளும் தேய்ந்து அழியும்.

மு.வரதராசன்

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

பரிமேலழகர்

நீரவர் கேண்மை பிறை நிறை நீர - அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந் தன்மையவாம்; பேதையார் நட்பு மதிப் பின் நீர - மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந் தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம். '('நீரவர்' என்றார், இனிமை பற்றி. கேண்மை, நட்பு என்பன ஒரு பொருட்கிளவி. செய்தாரது பன்மையான் நட்பும் பலவாயின. அறிவுடையாரும் அறிவுடையாரும் செய்தன முன் சுருங்கிப் பின் பெருகற்கும், பேதையாரும் பேதையாரும் செய்தன முன் பெருகிப் பின் சுருங்கற்கும் காரணம் தம்முள் முன் அறியாமையும் பின்' அறிதலும் ஆம்.)

சாலமன் பாப்பையா

பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

Meaning in English

Friendship with men fulfilled of good Waxes like the crescent moon; Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout