செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.
seyaRkariya yAvuLa naTpin atupOlvinaikkariya yAvuLa kAppu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
தூய நல்நட்பைப் போலச் சம்பாதிப்பதற்கு அரிய பொருள் உலகில் வேறு எதுவுமில்லை; அத்தகைய நல்நட்பை அடைந்துவிட்டால், பகையினரின் தீங்கிலிருந்து ஒருவனைக் காக்கும் சிறந்த பாதுகாப்புக் காவல் அரண் வேறு எதுவும் இல்லை.
• நட்பின் செயற்கரிய யாவுள = நல்நட்பைப் போலச் சம்பாதிப்பதற்கு அரிய பொருள் வேறு எது உண்டு?• அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு = அதுபோல பகைவரின் செயலிலிருந்து காக்கும் சிறந்த அரண் வேறு எது உண்டு?
Murugaa simple commentary
There is nothing else in the world as rare to earn as pure good friendship; if one attains such good friendship, there is nothing else that is an excellent protective defense that protects one from the harm of enemies.
• What is as difficult to achieve as friendship = What other thing is there as rare to earn like good friendship?• What defense is as difficult against action like that = Like that, what other excellent defense is there that protects from the actions of enemies?
Machine translation from the Tamil
மு.வரதராசன்
நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.
பரிமேலழகர்
நட்பின் செயற்கு அரிய யா உள - நட்புப்போலச் செய்து கோடற்கு அரிய பொருள்கள் யாவை உள? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள - செய்துகொண்டால் அது போலப் பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவலாவன யாவை உள?(நட்புச்செய்தற்கு ஆவாரைப் பெறுதலும், பெற்றால்செய்யும் உபாயமும், செய்தால் திரிபின்றி நிற்றலும்முதலிய அரிய ஆகலின். 'நட்பிற் செயற்கு அரியன இல்லை' என்றும், செய்தால் பகைவரஞ்சி வினை தொடங்காராகலின், 'அதுபோல வினைவாராமைக்கு அரிய காவல் இல்லை' என்றும் கூறினார். நட்புத்தான் இயற்கை செயற்கை என இருவகைப்படும்: அவற்றுள் இயற்கை, பிறப்பு முறையானாயதூஉம், தேய முறையானாயதூஉம் என இருவகைப்படும். அவற்றுள் முன்னையது சுற்றமாகலின், அது 'சுற்றந்தழாலின்'அடங்கிற்று. ஏனையது பகையிடையிட்ட தேயத்ததாகலின், அதுதுணைவலி என 'வலியறிதலுள்' அடங்கிற்று. இனி ஈண்டுச்சொல்லப்படுவது முன்செய்த உதவி பற்றி வருஞ் செயற்கையேயாகலின், அதன் சிறப்பு இதனாற் கூறப்பட்டது.)
Parimelazhagar
What is there so difficult to acquire as friendship, what things are there that are so difficult to acquire as friendship? What is there like it as a difficult guard against action, once acquired, what guards are there like it that are so difficult for the actions of enemies to penetrate? (Since finding those fit for making friendship, the means of making it once they are found, and standing without change once it is made, and the like, are difficult, he said 'there are none so difficult to acquire as friendship', and since once it is made, enemies will fear and not begin action, he said 'like it, there is no difficult guard to prevent action from coming'. Friendship itself is of two kinds, natural and acquired: among them, the natural is of two kinds, that which comes by way of birth, and that which comes by way of country. Among them, since the former is kinship, it was included under 'Embracing Kin'. Since the other is of a country with an enemy in between, it was included as the strength of allies under 'Knowing the Strength'. Now, since what is spoken of here is only the acquired kind that comes through help rendered previously, its excellence was stated by this.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?
Meaning in English
What so hard for men to gain as friendship true What so sure defence 'gainst all that foe can do

