Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 779

பொருட்பால்அங்கவியல்78. படைச்செருக்கு

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர்.

izhaitta tikavAmais sAvArai yArEpizhaitta toRukkiR pavar

Venkatraman

பொருள் / உரை

முருகா எளிய உரை

தாம் எடுத்த வீரச் சபதத்தைக் காப்பாற்றுவதற்காகப் போர்க்களத்தில் நின்று போரிட்டு வீரமரணம் அடைந்த மாவீரர்களை, சபதம் நிறைவேறவில்லை என்று குறை கூறி இகழ எவராலும் முடியாது.

• இழைத்தது இகவாமைச் சாவாரை = தாம் எடுத்த சபதம் தவறாமல் காக்க வீரமரணமடைந்தவரை,• பிழைத்தது ஒறுக்கிற்பவர் யாரே = சபதம் தவறியதாகக் குற்றம் கூறி எவரால் இகழ முடியும்?

மு.வரதராசன்

தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

பரிமேலழகர்

இழைத்தது இகவாமைச் சாவாரை - தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை; பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார் - அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்?(இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னனாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்லி' என்பது அவாய் நிலையான்வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற்சிறப்புக் கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?

Meaning in English

Who says they err, and visits them scorn, Who die and faithful guard the vow they've sworn

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout