Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 778

பொருட்பால்அங்கவியல்78. படைச்செருக்கு

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர்.

uRinuyir anjsA maRavar iRaivanseRinunjsIr kunRal ilar

Solai Sai

பொருள் / உரை

முருகா எளிய உரை

போர்க்களம் என்று வந்துவிட்டால் தம் உயிரை இழக்கவும் அஞ்சாத வீரர்கள், சமாதானம் பேசி அரசனே சினந்து தடுத்தாலும் கூட, தாய்நாட்டைக் காக்கும் தங்களின் வீரச் சிறப்பில் சிறிதும் குறைவுபட மாட்டார்கள்.

• உறின் உயிர் அஞ்சா மறவர் = போர் வந்தால் உயிரைக் கொடுக்கவும் அஞ்சாத வீரர்கள்,• இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் = அரசன் சினந்து தடுத்தாலும் தம் வீரத்தில் குறைய மாட்டார்கள்.

மு.வரதராசன்

போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

பரிமேலழகர்

உறின் உயிர் அஞ்சா மறவர் - போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் - தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார். (போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்'(புறநா.31) என்றும்,'புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'(புறநா.68) என்றும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.

Meaning in English

Fearless they rush where'er 'the tide of battle rolls'; The king's reproof damps not the ardour of their eager souls

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout