Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 777

பொருட்பால்அங்கவியல்78. படைச்செருக்கு

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

suzhalum isaivENTi vENTA uyirArkazhalyAppuk kArikai nIrttu

திருக்குறள் / THIRUKKURAL

பொருள் / உரை

முருகா எளிய உரை

உலகம் முழுவதும் நிலைத்து நிற்கும் அழியாத புகழை விரும்பி, தன் உயிரைப் பொருட்படுத்தாத தியாக மாவீரர்கள் தங்கள் காலில் வீரக்கழல் அணிவதே உண்மையான அழகும் தகுதியும் வாய்ந்த பெருமையாகும்.

• சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் = உலகெங்கும் பரவும் புகழை விரும்பி உயிரைப் பொருட்படுத்தாத மாவீரர்,• கழல்யாப்புக் காரிகை நீர்த்து = காலில் வீரக்கழல் அணிவதே உண்மையான அழகும் பெருமையுமாகும்.

மு.வரதராசன்

பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

பரிமேலழகர்

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் - துறக்கத்துத் தம்மொடு செல்லாது வையத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை வேண்டி உயிர் வாழ்தலை வேண்டாத வீரர்; கழல் யாப்புக்காரிகை நீர்த்து - கழல் கட்டுதல் அலங்கார நீர்மையை உடைத்து. (வையைத்தைச் சூழும் எனவே, அதன் பெருமை பெற்றாம். செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. சூழல் - அகத்திடல். துறக்கமும் புகழும் எளிதின் எய்துவராகலின், ஆபரணமாவது அதுவே என்பதாம்.)

சாலமன் பாப்பையா

தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.

Meaning in English

Who seek for world-wide fame, regardless of their life, The glorious clasp adorns, sign of heroic strife

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout