Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 776

பொருட்பால்அங்கவியல்78. படைச்செருக்கு

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து.

vizhuppuN paTAtanAL ellAm vazhukkinuLvaikkuntan nALai eTuttu

Varshan

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒரு மாவீரன் தான் வாழ்ந்த நாட்களை எண்ணிப் பார்த்து, தாய்நாட்டைக் காக்கும் போரில் தன் மார்பில் வீரக்காயம் படாத நாட்களையெல்லாம் தன் வாழ்வில் வீணாகக் கழிந்த பயனற்ற நாட்களாகவே கருதுவான்.

• தன் நாளை எடுத்து = தான் வாழ்ந்த நாட்களை எண்ணிப் பார்த்து,• விழுப்புண் படாதநாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் = மார்பில் வீரக்காயம் படாத நாட்களை வீணான நாட்களாகவே ஒதுக்குவான்.

மு.வரதராசன்

வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

பரிமேலழகர்

தன் நாளை எடுத்து - தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் - அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன் . (விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத நாள்களோடும் கூட்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊறு அஞ்சாமை கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்

Meaning in English

The heroes, counting up their days, set down as vain Each day when they no glorious wound sustain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout