விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
vizhittakaN vElkoN TeRiya azhittimaippinOTTanRO vanka Navarkku
Sumedha Vijayaganesh & Madhuvanthi Vijayaganesh
பொருள் / உரை
முருகா எளிய உரை
பகைவரைச் சினந்து நோக்கிய வீரன், அவன் தன் மீது வேலை வீசியபோது அச்சத்தால் விழிகளை இமைத்து மூடினாலும்கூட, அது நெஞ்சுரம் கொண்ட மாவீரர்களுக்குப் போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடிய தோல்விக்குச் சமமானதாகும்.
• விழித்தகண் வேல்கொண்டெறிய அழித்திமைப்பின் = பகைவன் வேல் எறியும்போது கண்களை மூடி இமைத்தால்,• வன்கணவர்க்கு ஒட்டன்றோ = அது அஞ்சா நெஞ்சுரம் கொண்ட வீரர்க்குப் புறமுதுகிட்டு ஓடிய தோல்விக்குச் சமமாகும்.
மு.வரதராசன்
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
பரிமேலழகர்
விழித்த கண் - பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் - அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ - அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம். (அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.
Meaning in English
To hero fearless must it not defeat appear, If he but wink his eye when foemen hurls his spear





