Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 774

பொருட்பால்அங்கவியல்78. படைச்செருக்கு

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும்.

kaivEl kaLiRRoTu pOkki varupavanmeyvEl paRiyA nakum

Naga Chokkanathan

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் கையிலிருந்த வேலை எதிர்த்து வந்த யானையின் மீது எறிந்து கொன்றுவிட்டு, அடுத்து வரும் யானையை எதிர்க்க ஆயுதம் தேடி வருபவன், தன் மார்பில் தைத்திருந்த எதிரியின் வேலைக் கண்டதும் மகிழ்ச்சியோடு அதைப் பிடுங்கி எடுத்துச் சிரிக்கின்றான்.

• கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் = தன் கைவேலை யானை மேல் எறிந்துவிட்டு அடுத்த வேல் தேடி வருபவன்,• மெய்வேல் பறியா நகும் = தன் மார்பில் தைத்திருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்ந்து சிரிக்கின்றான்.

மு.வரதராசன்

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

பரிமேலழகர்

கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் - கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி; வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித்திரிவான்; மெய்வேல் பறியா நகும் - தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும். (களிற்றோடு போக்கல் - களிற்றினது உயிரைக் கொடுபோகுமாறு விடுதல். மகிழ்ச்சி, தேடிய தெய்தலான். இதனுள் களிற்றையல்லது எறியான் என்பதூஉம், சினமிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன. நூழிலாட்டு. (பு.வெ.மா.தும்பை16)

சாலமன் பாப்பையா

தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.

Meaning in English

At elephant he hurls the dart in hand; for weapon pressed, He laughs and plucks the javelin from his wounded breast

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout