பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு.
pErANmai enpa taRukanon RuRRakkAlUrANmai maRRatan eஃku
V. Mukunda Sai
பொருள் / உரை
முருகா எளிய உரை
பகைவரை அஞ்சாமல் எதிர்த்துப் போரிடும் நெஞ்சுரத்தைப் பேராண்மை என்பர்; அதே பகைவனுக்கு ஒரு தாழ்வோ துன்பமோ நேர்ந்த காலத்தில் இரங்கி உதவும் பெருந்தன்மையே அந்த வீர ஆண்மையின் கூர்மையான உச்சமாகும்.
• தறுகண் பேராண்மை என்ப = பகைவரை அஞ்சாமல் எதிர்த்துப் போரிடுவதைப் பேராண்மை என்பர்,• ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு = பகைவனுக்குத் துன்பம் வந்தபோது உதவும் பெருந்தன்மையே அதன் உச்சமாகும்.
மு.வரதராசன்
பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.
பரிமேலழகர்
தறுகண் பேராண்மை என்ப - பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு - அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீாத்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர்.('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை - உபகாரியாம்தன்மை, அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமினாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின்தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி (பு.வெ.மா.வஞ்சி 3)
சாலமன் பாப்பையா
பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.
Meaning in English
Fierceness in hour of strife heroic greatness shows; Its edge is kindness to our suffering foes





