அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானைபடைத்தகையால் பாடு பெறும்.
aTaltakaiyum ARRalum illeninum tAnaipaTaittakaiyAl pATu peRum
Sajani Jaikumar
பொருள் / உரை
முருகா எளிய உரை
பகைவரைத் தாக்கி வெல்லும் வீரமும் அவர்களின் தாக்குதலைத் தாங்கும் ஆற்றலும் குறைவாகவே இருந்தாலும், ஒரு படை தனது கட்டுக்கோப்பான கம்பீர அணிவகுப்புத் தோற்றப் பொலிவாலேயே எதிரிகளை அச்சுறுத்தும் பெருமையைப் பெறும்.
• அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் = தாக்கி வெல்லும் வீரமும் தடுக்கும் ஆற்றலும் குறைவாக இருந்தாலும்,• தானை படைத்தகையால் பாடு பெறும் = கட்டுக்கோப்பான கம்பீர அணிவகுப்பால் பெருமை பெறும்.
மு.வரதராசன்
போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.
பரிமேலழகர்
தானை - தானை; அடல் தகையும் ஆற்றல் இல் எனினும் - பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன்மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்; படைத்தகையால் பாடு பெறும் - தன்தோற்றப்பொலிவானே பெருமை எய்தும். ('இல்லெனினும்' எனவே, அவற்றது இன்றியமையாமை பெறப்பட்டது. 'படைத்தகை' என்றது ஒரு பெயர் மாத்திரமாய் நின்றது. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு, பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை.)
சாலமன் பாப்பையா
பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.
Meaning in English
Though not in war offensive or defensive skilled; An army gains applause when well equipped and drilled





