கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை.
kURRuTanRu mElvarinum kUTi etirniRkumARRa latuvE paTai
Asiriyar Nagulsamy குறளோசை
பொருள் / உரை
முருகா எளிய உரை
உயிரைப் பறிக்கும் எமனே சினந்து எதிர்த்து வந்தாலும் கலங்காமல், அனைவரும் மனமொன்றித் திரண்டு நின்று எதிர்த்துப் போரிடும் பேராற்றல் கொண்டதே சிறந்த படையாகும்.
• கூற்றுடன்று மேல்வரினும் = எமனே சினந்து எதிர்த்து வந்தாலும்,• கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை = ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் பேராற்றல் கொண்டதே சிறந்த படையாகும்.
மு.வரதராசன்
எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.
பரிமேலழகர்
கூற்று உடன்று மேல் வரினும் - கூற்றுவன் தானே வெகுண்டு மேல் வந்தாலும்; கூடி எதிர்நிற்கும ஆற்றலதுவே படை- நெஞ்சு ஒத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலையுடையதே படையாவது. ('மருந்தில் கூற்று' ஆகலின், (புற.நா.3) உம்மை சிறப்பும்மை. மிகப்பலர் நெஞ்சொத்தற்குக் காரணம் அரசன்மேல் அன்பு. ஆற்றல் - மனவலி.)
சாலமன் பாப்பையா
எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.
Meaning in English
That is a 'host' that joins its ranks, and mightily withstands, Though death with sudden wrath should fall upon its bands





