Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 764

பொருட்பால்அங்கவியல்77. படைமாட்சி

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை.

azhivin RaRaipOkA tAki vazhivantavanka NatuvE paTai

K. Murali

பொருள் / உரை

முருகா எளிய உரை

போர்க்களத்தில் புறமுதுகிட்டு அழியாமலும், பகைவரின் வஞ்சனைச் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாமலும், பரம்பரை பரம்பரையாக வந்த அஞ்சாத வீர நெஞ்சுரத்தைக் கொண்டிருப்பதே சிறந்த படையாகும்.

• அழிவின்றி அறைபோகாதாகி = போரில் அழியாமலும் பகைவரின் சூழ்ச்சிக்கு அடிபணியாமலும்,• வழிவந்த வன்கணதுவே படை = பரம்பரை நெஞ்சுரத்தைக் கொண்டிருப்பதே சிறந்த படையாகும்.

மு.வரதராசன்

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

பரிமேலழகர்

அழிவு இன்றி - போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி - பகைவரால் கீழறுக்கப்படாததாய்: வழிவந்த வன்கணதுவே படை - தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது. (அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை, 'கல்நின்றான் எந்தை கணவன் களப்பாட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு'. (பு.வெ.மா.வாகை,22) என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.)

சாலமன் பாப்பையா

போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

Meaning in English

That is a host, by no defeats, by no desertions shamed, For old hereditary courage famed

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout