Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 759

பொருட்பால்அங்கவியல்76. பொருள்செயல்வகை

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃகதனிற் கூரிய தில்.

seyka poruLais seRunar serukkaRukkumeஃtaniR kUriya til

Shilvi Sharon

பொருள் / உரை

முருகா எளிய உரை

நல்வழியில் செல்வத்தை ஈட்டிப் பெருக்க வேண்டும்; தம்மை அழிக்க நினைக்கும் பகைவர்களின் ஆணவத்தை அறுத்தெறியும் கூரிய ஆயுதமாகிய செல்வத்தை விட மேலான ஆயுதம் வேறு எதுவும் இல்லை.

• பொருளைச் செய்க = நல்வழியில் செல்வத்தை ஈட்டிப் பெருக்குக,• செறுநர் செருக்கறுக்கும் எஃகு அதனிற் கூரியதில் = பகைவரின் ஆணவத்தை அறுக்கும் ஆயுதம் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

மு.வரதராசன்

ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

பரிமேலழகர்

பொருளைச் செய்க - தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - தம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற் கூரியது இல் - அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை. ('அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற் கூரியது இல்' என்றும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.

Meaning in English

Make money! Foeman's insolence o'ergrown To lop away no keener steel is known

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout