Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 757

பொருட்பால்அங்கவியல்76. பொருள்செயல்வகை

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டு.

aruLennum anpIn kuzhavi poruLennumselvas seviliyAl uNTu

Eshwar

பொருள் / உரை

முருகா எளிய உரை

அன்பு என்னும் தாய் பெற்றெடுத்த ‘அருள்’ (இரக்கம்) என்கின்ற குழந்தையானது, ‘பொருள்’ என்கின்ற வளர்ப்புத் தாயின் துணை கொண்டுதான் நற்செயல்களைச் செய்து முழுமையாக வளர முடியும்.

• அன்பீன் அருள் என்னும் குழவி = அன்பு பெற்றெடுத்த ‘அருள்’ என்னும் குழந்தை,• பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு = ‘பொருள்’ என்னும் வளர்ப்புத் தாயால் மட்டுமே இவ்வுலகில் நன்கு வளரும்.

மு.வரதராசன்

அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

பரிமேலழகர்

அன்பு ஈன் அருள் என்னும் குழவி - அன்பினால் ஈனப்பட்ட அருள் என்னும் குழவி; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு - பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலியான் வளரும். (தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள் தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவதாகலின், அதனை 'அன்பு ஈன் குழவி' என்றும், அது வறியார்மேற் செல்வது அவ்வறுமை களையவல்லார்க்காதலின் பொருளை அதற்குச் 'செவிலி' என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலிற் செல்வச் செவிலி என்றும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.

Meaning in English

'Tis love that kindliness as offspring bears: And wealth as bounteous nurse the infant rears

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout