Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 756

பொருட்பால்அங்கவியல்76. பொருள்செயல்வகை

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள்.

uRuporuLum ulku poruLuntan onnArtteRuporuLum vEntan poruL

Edwin Louis Viswanath

பொருள் / உரை

முருகா எளிய உரை

வாரிசு இல்லாததால் வந்தடையும் உரிமைப் பொருளும், வணிகப் பண்டங்களுக்குரிய நியாயமான சுங்க வரியும், பகைவரை வென்று பெறும் கப்பப் பொருளும் ஆகிய இவையே அரசுக்குரிய முறையான வருவாய்களாகும்.

• உறுபொருளும் உல்குபொருளும் = வாரிசற்ற உரிமைப் பொருளும் வணிகச் சுங்க வரியும்,• தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள் = பகைவரை அடக்கிப் பெறும் கப்பமும் அரசுக்குரிய செல்வங்களாகும்.

மு.வரதராசன்

இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.

பரிமேலழகர்

உறுபொருளும் - உடையாரின்மையின் தானே வந்துற்ற பொருளும்; உல்கு பொருளும் - சுங்கமாகிய பொருளும்; தன் ஒன்னார்த் தெறுபொருளும் - தன் பகைவரை வென்று திறையாகக் கொள்ளும் பொருளும்; வேந்தன் பொருள் - அரசனுக்கு உரிய பொருள்கள். (உறுபொருள்: வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉமாம். சுங்கம் - கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது. தெறுபொருள்: 'தெறுதலான் வரும் பொருள்' என விரியும். ஆறில் ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும் நெறி கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம்.

Meaning in English

92 Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout