அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல்.
aruLoTum anpoTum vArAp poruLAkkampullAr puraLa viTal
Diya
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் = இரக்கமும் அன்பும் இல்லாமல் அநீதியாகச் சேர்த்த செல்வம்,• புல்லார் புரள விடல் = அதை ஒருபோதும் ஏற்காமல் அறவே புறந்தள்ளிவிட வேண்டும்.எளிய விளக்கம்:எளிய மக்கள் மீதான கருணையோடும் அன்போடும் கூடி வராமல், பிறரைத் துன்புறுத்தி அநீதியாகச் சேர்க்கப்படும் செல்வத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாமல் உடனே புறந்தள்ளிவிட வேண்டும்.
மு.வரதராசன்
அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.
பரிமேலழகர்
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் - தாம் குடிகள் மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை; புல்லார் புரள விடல் - அரசர் பொருந்தாது கழியவிடுக. (அவற்றோடு கூடி வருதலாவது, ஆறிலொன்றாய் வருதல், அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் நீர்போலத் செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்' என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக
Meaning in English
Wealth gained by loss of love and grace, Let man cast off from his embrace





