Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 753

பொருட்பால்அங்கவியல்76. பொருள்செயல்வகை

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று.

poruLennum poyyA viLakkam iruLaRukkumeNNiya tEyattus senRu

Anitha Jaishankar

பொருள் / உரை

முருகா எளிய உரை

செல்வம் என்னும் அணையாத சுடர் விளக்கானது, அதை உடையவர் நினைத்த தேசங்களுக்கெல்லாம் சென்று, அங்கே உள்ள துன்பம் மற்றும் பகைமை என்னும் காரிருளை அறவே நீக்கி நல்வாழ்வு தரும்.

• பொருளென்னும் பொய்யா விளக்கம் = செல்வம் என்னும் அணையாத சுடர்விளக்கு,• எண்ணிய தேயத்துச் சென்று இருளறுக்கும் = நினைத்த இடங்களுக்கெல்லாம் சென்று துன்ப இருளைப் போக்கும்.

மு.வரதராசன்

பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்

பரிமேலழகர்

பொருள் என்னும் பொய்யா விளக்கம் - பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு; எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னைச் செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும். (எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல் பற்றி. 'பொய்யா விளக்கம்' என்றும், ஏனைய விளக்கோடு இதனிடை வேற்றுமை தோன்ற 'எண்ணிய தேயத்துச் சென்று' என்றும் கூறினார். ஏகதேச உருவகம். இவை மூன்று பாட்டானும் பொருளது சிறப்புக் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா

பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.

Meaning in English

Wealth, the lamp unfailing, speeds to every land, Dispersing darkness at its lord's command

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout