Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 752

பொருட்பால்அங்கவியல்76. பொருள்செயல்வகை

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு.

illArai ellArum eLLuvar selvaraiellArum seyvar siRappu

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

பொருட்செல்வம் இல்லாத எளியவர்களை எத்தகைய நற்குணங்கள் இருந்தாலும் உலகத்தார் இகழ்ந்து ஒதுக்குவர்; ஆனால் செல்வம் படைத்தவர்களை உலகத்தவர் அனைவரும் பணிந்து பாராட்டிச் சிறப்புச் செய்வர்.

• இல்லாரை எல்லாரும் எள்ளுவர் = பொருளில்லாத ஏழைகளை அனைவரும் இகழ்வர்,• செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு = செல்வம் உடையவரை அனைவரும் போற்றிச் சிறப்புச் செய்வர்.

மு.வரதராசன்

பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.

பரிமேலழகர்

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத்தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர். (உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு.)

சாலமன் பாப்பையா

பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.

Meaning in English

Those who have nought all will despise; All raise the wealthy to the skies

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout