பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்லது இல்லை பொருள்.
poruLal lavaraip poruLAkas seyyumporuLalla tillai poruL
Bhavana Bharath
பொருள் / உரை
முருகா எளிய உரை
எவராலும் மதிக்கப்படாத எளியோரையும் சமுதாயத்தில் மதிப்புடையவராக உயர்த்தும் ஆற்றல் கொண்ட செல்வத்தைத் தவிர, ஒருவனுக்குப் பெருமை தரும் சிறந்த பொருள் வேறு எதுவும் இல்லை.
• பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் = ஒரு பொருட்டாக மதிக்கப்படாதவரையும் மதிக்கச் செய்யும் ஆற்றல் கொண்ட,• பொருளல்லது இல்லை பொருள் = செல்வத்தைத் தவிர வேறு சிறந்த பொருள் உலகத்தில் இல்லை.
மு.வரதராசன்
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
பரிமேலழகர்
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது - ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய வல்ல பொருளையொழிய; பொருள் இல்லை - ஒருவனுக்குப் பொருளாவதில்லை. (மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார், இழிவு சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல் - அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற்சென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே; பிறிதில்லை என்பதாம்.)
சாலமன் பாப்பையா
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.
Meaning in English
Nothing exists save wealth, that can Change man of nought to worthy man





