Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 750

பொருட்பால்அங்கவியல்75. அரண்

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண்.

enaimATsit tAkiyak kaNNum vinaimATsiillArkaN illa taraN

S. Mirithigaa Sree

பொருள் / உரை

முருகா எளிய உரை

எத்தனை பெருமைகளையும் அமைப்புகளையும் ஒரு கோட்டை அரண் பெற்றிருந்தாலும், அதைக் காத்துச் செயல்படும் வீரர்களிடம் போர்த் திறமையும் நெஞ்சுரமும் இல்லாவிட்டால், அந்த அரணால் எவ்விதப் பயனும் இல்லாமல் போகும்.

• எனை மாட்சித்தாகியக் கண்ணும் = கோட்டை எத்தனை பெருமைகளைக் கொண்டிருந்தாலும்,• வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண் = செயல்படும் திறமை இல்லாதவரிடம் அரண் இருந்தும் பயனில்லை.

மு.வரதராசன்

எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை

பரிமேலழகர்

அரண் - அரண்; எனை ஆகியக்கண்ணும் - மேற்சொல்லப்பட்ட மாட்சியெல்லாம் உடைத்தாயவிடத்தும்; வினை மாட்சி இல்லார்கண் இல்லது - வினை செய்தற்கண் மாட்சி இல்லாதார் மாட்டு அவையிலதாம்.(வாளா இருத்தலும், அளவறியாது செய்தலும், ஏலாதது செய்தலும் எல்லாம் அடங்க, 'வினைமாட்சியில்லார்' என்றும், ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால் அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார், 'அவையுடைத்தன்று' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.

Meaning in English

Howe'er majestic castled walls may rise, To craven souls no fortress strength supplies

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout