Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 749

பொருட்பால்அங்கவியல்75. அரண்

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண்.

munaimukattu mARRalar sAya vinaimukattuvIReyti mANTa taraN

Dhanya Haridas

பொருள் / உரை

முருகா எளிய உரை

போர் தொடங்கிய உடனே பகைவர்கள் நிலை குலைந்து அழியும்படியாக, உள்ளிருக்கும் வீரர்கள் செய்யும் போர்த்தந்திரச் செயல்களால் சிறப்புப் பெற்றுத் திகழ்வதே தலைசிறந்த கோட்டை அரணாகும்.

• முனைமுகத்து மாற்றலர் சாய = போர் தொடங்கிய தொடக்கத்திலேயே பகைவர் அழியுமாறு,• வினைமுகத்து வீறெய்தி மாண்டது அரண் = போர்த்திறன் நுட்பங்களால் சிறந்து விளங்குவதே அரணாகும்.

மு.வரதராசன்

போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

பரிமேலழகர்

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி - போர் தொடங்கின அளவிலே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று; மாண்டது அரண் - மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது. (தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப்பொருதல் கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினை வேறுபாடுகளாவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல், என்றிவை முதலாய வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். 'மற்றும் வேண்டும் மாட்சி' யென்றது, புறத்தோர் அறியாமற் புகுதல் போதல் செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை.)

சாலமன் பாப்பையா

போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.

Meaning in English

At outset of the strife a fort should foes dismay; And greatness gain by deeds in every glorious day

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout