Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 745

பொருட்பால்அங்கவியல்75. அரண்

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்நிலைக்கெளிதாம் நீரது அரண்.

koLaRkaritAyk koNTakUzht tAki akattArnilaikkeLitAm nIra taraN

Jayavanthi & Shylaja

பொருள் / உரை

முருகா எளிய உரை

பகைவர்களால் எளிதில் கைப்பற்ற முடியாததாய், உள்ளிருப்போருக்குத் தேவையான உணவுப் பொருள்கள் நிறைந்ததாய், உள்ளிருக்கும் வீரர்கள் நின்று எளிதில் போரிடுவதற்கு ஏற்ற அமைப்பைக் கொண்டிருப்பதே சிறந்த அரணாகும்.

• கொளற்கரிதாய் கொண்ட கூழ்த்தாகி = பகைவரால் கைப்பற்ற முடியாததாய் உணவு தானியங்கள் நிறைந்ததாய்,• அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் = உள்ளிருப்போர் நின்று எளிதில் போரிட வசதியுடையதே சிறந்த அரணாகும்.

மு.வரதராசன்

பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

பரிமேலழகர்

கொளற்கு அரிதாய் - புறத்தாரால் கோடற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி - உட்கொண்ட பலவகை உணவிற்றாய்; அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் - அகத்தாரது போர்நிலைக்கு எளிதாய நீர்மையையுடையதே அரணாவது. (கோடற்கு அருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும் இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின. நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட ஆயுதம் முதலிய புறத்தார்மேல் எளிதில் சேறலும் அவர் விட்டன அகத்தார்மேல் செல்லாமையும், பதணப்பரப்பும் முதலாயின.)

சாலமன் பாப்பையா

பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.

Meaning in English

Impregnable, containing ample stores of food, A fort for those within, must be a warlike station good

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout