மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண்.
maNinIrum maNNum malaiyum aNinizhaRkATum uTaiya taraN
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
தெளிந்த நீரரண், பகைவர் பதுங்க முடியாத வெட்டவெளி நிலவரண், உயர்ந்த மலையரண், அடர்ந்த காட்டரண் ஆகிய நான்கு வகை இயற்கை அரண்களையும் கொண்டிருப்பதே தலைசிறந்த கோட்டை அரணாகும்.
• மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் = தெளிந்த நீர்நிலை, வெட்டவெளி நிலம், மலை, அடர்ந்த காடு,• உடையது அரண் = ஆகிய நான்கு இயற்கை அரண்களையும் கொண்டிருப்பதே சிறந்த அரணாகும்.
மு.வரதராசன்
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
பரிமேலழகர்
மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாவது. (எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலம் என்பார் 'மண்' என்றும், செறிந்த காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார்.மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய் இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.
Meaning in English
A fort is that which owns fount of waters crystal clear, An open space, a hill, and shade of beauteous forest near





