Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 740

பொருட்பால்அங்கவியல்74. நாடு

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு.

Angkamai veytiyak kaNNum payaminREvEntamai villAta nATu

Raktshana

பொருள் / உரை

முருகா எளிய உரை

மக்களின் மீது அன்பும் கருணையும் கொண்ட நல்லாட்சி அமையாத நாட்டில், எல்லாவிதமான இயற்கை வளங்களும் செல்வங்களும் நிறைந்திருந்தாலும் கூட, அவற்றால் மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லாமல் போகும்.

• வேந்தமைவில்லாத நாடு = மக்கள் மீது கருணையுள்ள நல்லாட்சி இல்லாத நாடு,• ஆங்கமைவெய்தியக் கண்ணும் பயமின்றே = இயற்கை வளங்கள் அனைத்தும் நிறைந்திருந்தாலும் எந்தப் பயனும் இல்லாததேயாகும்.

மு.வரதராசன்

நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.

பரிமேலழகர்

வேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று.(வேந்து அமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.

Meaning in English

Though blest with all these varied gifts' increase, A land gains nought that is not with its king at peace

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout