Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 739

பொருட்பால்அங்கவியல்74. நாடு

நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு.

nATenpa nATA vaLattana nATallanATa vaLantaru nATu

Lakshmi Jai

பொருள் / உரை

முருகா எளிய உரை

வாழும் மக்கள் தேடி அலைந்து வருந்தாமல் இயல்பாகவே நிறைந்த வளங்களைத் தரும் பூமியே சிறந்த நாடாகும்; மக்கள் மிகவும் வருந்தித் தேடினாலன்றி வளம் தராத நிலம் சிறந்த நாடாகாது.

• நாடா வளத்தன நாடு என்ப = மக்கள் தேடி வருந்தாமல் இயல்பாகவே வளம் தருவதே சிறந்த நாடாகும்,• நாட வளந்தரு நாடு நாடல்ல = மக்கள் வருந்தித் தேடிய பிறகே வளம் தரும் பூமி சிறந்த நாடாகாது.

மு.வரதராசன்

முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

பரிமேலழகர்

நாடா வளத்தன நாடு என்ப - தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்; நாடவளம் தரும் நாடு நாடு அல்ல - ஆதலால் தேடி வருந்தச் செல்வம் அடைவிக்கும் நாடுகள் நாடாகா. (நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. 'பொருள் செய்வார்க்கும் அஃது இடம்' (சிந்.நாம.48) என்றார் பிறரும். நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு. இவ்வாறன்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.)

சாலமன் பாப்பையா

தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

Meaning in English

That is a land that yields increase unsought, That is no land whose gifts with toil are bought

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout