அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
anpInum Arvam uTaimai atuInumnaNpennum nATAs siRappu
K. Prabhakar
பொருள் / உரை
முருகா எளிய உரை
உள்ளத்தில் உள்ள அன்பு ஆர்வம் தான் தரும்!யாவரொடும் பழகும் விருப்பம் தரும்!விருப்பமே நட்பு எனும் பேரைத் தரும்!தேடாமல் வரும் பெருஞ்சிறப்பைத் தரும்!
• அன்பு = உள்ளத்தில் உள்ள அன்பானது• ஆர்வம் உடைமை ஈனும் = அனைவரிடமும் பழகும் ஆசையையும் விருப்பத்தையும் தரும்;• அது ஈனும் = அந்த விருப்பமானது• நண்பு என்னும் = 'நட்பு' என்று சொல்லப்படும்• நாடாச் சிறப்பு = தேடாமலே வந்து சேரும் அளவற்ற பெரும் சிறப்பைத் தரும்.
மு.வரதராசன்
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்
பரிமேலழகர்
அன்பு ஆர்வமுடைமை ஈனும் - ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச்சிறப்பு ஈனும் - அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவறந்த சிறப்பினைத் தரும்.(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்.)
சாலமன் பாப்பையா
குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்
Meaning in English
From love fond yearning springs for union sweet of minds; And that the bond of rare excelling friendship binds





