அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போடு இயைந்த தொடர்பு.
anpO Tiyainta vazhakkenpa AruyirkkuenpO Tiyainta toTarpu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஆருயிர் தொடர்பு தான் உடலுக்கே!அது கொள்ளும் பயனோ அன்பினுக்கே!பிற உயிர்மேல் அன்பு செலுத்தற்கே!அதுவே பயன் என்பர் அறிஞர்க்கே!
• ஆருயிர்க்கு = பெறுதற்கரிய மனித உயிருக்கு• என்போடு = எலும்பு உடம்போடு• இயைந்த தொடர்பு = கூடிப் பொருந்தியுள்ள தொடர்பானது,• அன்போடு = பிற உயிர்களிடம் அன்பு செலுத்தி• இயைந்த வழக்கு என்ப = வாழும் நல்வாழ்க்கையின் பயனே என்று அறிஞர் கூறுவர்.
மு.வரதராசன்
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
பரிமேலழகர்
ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர். (பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.)
சாலமன் பாப்பையா
பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்
Meaning in English
Of precious soul with body's flesh and bone, The union yields one fruit, the life of love alone





