அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.
anpilAr ellAm tamakkuriyar anpuTaiyArenpum uriyar piRarkku
K. J. Yesudas
பொருள் / உரை
முருகா எளிய உரை
அன்பிலார் பொருள் தமக்கெனக் கொள்வார்!சுயநலம் ஒன்றையே பேணி வாழ்வார்!அன்புடையார் என்பும் பிறர்க்கே ஈவார்!பிறர்நலம் காக்கவே அர்ப்பணிப்பார்!
• அன்பிலார் = உள்ளத்தில் அன்பு இல்லாதவர்• எல்லாம் = எல்லாப் பொருள்களையும்• தமக்கு உரியர் = தமக்கே உரியது என்று சுயநலத்தோடு வாழ்வர்;• அன்புடையார் = அன்பு கொண்டவரோ• என்பும் = தம் எலும்பையும் (உடலையும் உயிரையும்) கூட• பிறர்க்கு உரியர் = பிறருக்காகவே அர்ப்பணித்து வாழ்வர்.
மு.வரதராசன்
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்
பரிமேலழகர்
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் - அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர். (ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்' (புறநா.43) முதலாயினார் கண்காண்க.)
சாலமன் பாப்பையா
அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்
Meaning in English
The loveless to themselves belong alone; The loving men are others' to the very bone





