இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
irupunalum vAynta malaiyum varupunalumvallaraNum nATTiR kuRuppu
Varshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
மழைநீர், ஊற்றுநீர் ஆகிய இருவகை நீர்வளமும், வளம் நிறைந்த மலையும், அம்மலையிலிருந்து வற்றாமல் பாய்ந்து வரும் ஆற்று நீரும், வலிமையான பாதுகாப்பு அரண்களும் ஒரு நாட்டின் இன்றியமையாத அங்கங்களாகும்.
• இருபுனலும் = ஊற்றுநீர், ஏரிநீர் ஆகிய இருவகை நீர்வளமும்,• வாய்ந்த மலையும் வருபுனலும் = வளம் நிறைந்த மலையும் அதிலிருந்து பாயும் ஆற்றுநீரும்,• வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு = வலிமையான பாதுகாப்பு அரணும் நாட்டின் முக்கிய உறுப்புகளாகும்.
மு.வரதராசன்
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
பரிமேலழகர்
இருபுனலும் - 'கீழ் நீர்', 'மேல்நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்; வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும் - அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயமாம்.(ஈண்டுப் புனல் என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயமாதற்குரியன அவையேஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம் தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும் உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண் -ஆகுபெயர். இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.
Meaning in English
Waters from rains and springs, a mountain near, and waters thence; These make a land, with fortress' sure defence





