Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 733

பொருட்பால்அங்கவியல்74. நாடு

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு.

poRaiyorungku mElvarungkAl tAngki iRaivaRkiRaiyorungku nErvatu nATu

Sraavya Pradeep

பொருள் / உரை

முருகா எளிய உரை

அண்டை நாடுகளில் இருந்து துயரத்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக வரும்போதும் அந்தச் சுமையை அன்போடு தாங்கி, தன் நாட்டு அரசனுக்குச் செலுத்த வேண்டிய வரிகளையும் குறைவின்றித் தரவல்ல வளமுடையதே சிறந்த நாடாகும்.

• பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி = பிற நாட்டு மக்களின் சுமை ஒருசேர வரும்போது தாங்கி,• இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு = அரசனுக்குரிய வரிகளையும் குறைவின்றி மனமுவந்து தருவதே நாடாகும்.

மு.வரதராசன்

(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.

பரிமேலழகர்

பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது. (பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத்தொகுதியும், தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல், அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார்.)

சாலமன் பாப்பையா

போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.

Meaning in English

When burthens press, it bears; Yet, With unfailing hand To king due tribute pays: that is the 'land'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout