Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 732

பொருட்பால்அங்கவியல்74. நாடு

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு.

perumporuLAR peTTakka tAki arungkETTAlARRa viLaivatu nATu

Vaimu

பொருள் / உரை

முருகா எளிய உரை

அளவற்ற செல்வ வளத்தால் பிற நாட்டவராலும் விரும்பத்தக்கதாய், எந்தவிதமான இயற்கை மற்றும் செயற்கைக் கேடுகளும் இல்லாமல், மிகையான விளைச்சலைத் தருவதே சிறந்த நாடாகும்.

• பெரும்பொருளால் பெட்டக்கதாகி = சிறந்த பொருள்வளத்தால் பிறரால் விரும்பப்படுவதாய்,• அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு = கேடில்லாமல் மிகுதியான விளைச்சலைத் தருவதே நாடாகும்.

மு.வரதராசன்

மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

பரிமேலழகர்

பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த பொருளுடைமையால் பிற தேயத்தாரானும் விரும்பத்தக்கதாய்; அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின்மையோடுகூடி மிகவிளைவதே நாடாவது. (அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல், பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான் வருவது.'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில் கிளி அக்கண் அரசண்மையோடு ஆறு'. இவற்றை வடநூலார் 'ஈதிவாதைகள்'என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும் வரும். இவ்வின்மைகளான் மிகவிளைவதாயிற்று.)

சாலமன் பாப்பையா

மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.

Meaning in English

That is a 'land' which men desire for wealth's abundant share, Yielding rich increase, where calamities are rare

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout