Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 734

பொருட்பால்அங்கவியல்74. நாடு

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு.

uRupasiyum OvAp piNiyum seRupakaiyumsErA tiyalvatu nATu

R. Venkat Anurag

பொருள் / உரை

முருகா எளிய உரை

மக்களை வாட்டும் கொடிய பசியும், ஓயாமல் துயர் தரும் கொள்ளை நோய்களும், நாட்டை அழிக்கும் பகைவர்களின் போரும் அணுகாமல் அமைதியாக நடைபெறுவதே சிறந்த நாடாகும்.

• உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் = கொடும் பசியும் ஓயாத நோயும் அழிவு தரும் பகையும்,• சேராதியல்வது நாடு = அணுகாமல் இனிதே நடைபெறுவதே சிறந்த நாடாகும்.

மு.வரதராசன்

மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

பரிமேலழகர்

உறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சேராது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.)

சாலமன் பாப்பையா

மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.

Meaning in English

That is a 'land' whose peaceful annals know, Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout