உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார்.
uLareninum illAro Toppar kaLananjsikkaRRa selassollA tAr
Harini Narayanan
பொருள் / உரை
முருகா எளிய உரை
அவைக்களத்தைக் கண்டு அஞ்சி, தாம் கற்றவற்றை அடுத்தவர் உள்ளத்தில் பதியுமாறு எடுத்துரைக்க இயலாதவர்கள், உடலால் உயிருடன் வாழ்ந்தாலும் கூட இறந்தவர்களுக்குச் சமமானவர்களாகவே கருதப்படுவர்.
• களனஞ்சிக் கற்ற செலச்சொல்லாதார் = அவையைக் கண்டு அஞ்சி தாம் கற்றவற்றை உரைக்க முடியாதவர்,• உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் = உயிருடன் வாழ்ந்தாலும் இறந்தவர்க்குச் சமமானவரே ஆவர்.
மு.வரதராசன்
அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
பரிமேலழகர்
களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர்.(ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.
Meaning in English
Who what they've learned, in penetrating words know not to say, The council fearing, though they live, as dead are they





