கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்நல்லா ரவையஞ்சு வார்.
kallA tavariR kaTaiyenpa kaRRaRintumnallA ravaiyanjsu vAr
Eliyesar John Baruva
பொருள் / உரை
முருகா எளிய உரை
பல நூல்களையும் கற்று அவற்றின் பயனை உணர்ந்திருந்த போதிலும், நல்லறிஞர்கள் நிறைந்த சான்றோர் அவையைக் கண்டு அஞ்சி ஒதுங்குபவர்கள், படிக்காத கல்லாதவர்களைக் காட்டிலும் மிகவும் இழிந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
• கற்றறிந்தும் நல்லார் அவையஞ்சுவார் = பல நூல்களைக் கற்றிருந்தும் சான்றோர் அவையைக் கண்டு அஞ்சுபவர்கள்,• கல்லாதவரின் கடையென்ப = படிக்காத பாமரர்களைக் காட்டிலும் கடைப்பட்டவர் ஆவர்.
மு.வரதராசன்
நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
பரிமேலழகர்
கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் - நூல்களைக் கற்றுவைத்தும், அவற்றால் பயனறிந்து வைத்தும், நல்லார் இருந்த அவையினை அஞ்சி ஆண்டுச் சொல்லாதாரை; கல்லாதவரின் கடை என்ப - உலகத்தார் கல்லாதவரினும் கடையர் என்று சொல்லுவர். (அக்கல்வி அறிவுகளால் பயன் தாமும் எய்தாது பிறரை எய்துவிப்பதும் செய்யாது, கல்வித்துன்பமே எய்தி நிற்றலின், 'கல்லாதவரின் கடை' என உலகம் பழிக்கும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.
Meaning in English
Who, though they've learned, before the council of the good men quake, Than men unlearn'd a lower place must take





