Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 728

பொருட்பால்அங்கவியல்73. அவையஞ்சாமை

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்நன்கு செலச்சொல்லா தார்.

pallavai kaRRum payamilarE nallavaiyuLnanku selassollA tAr

Adithya Sai Krishnan

பொருள் / உரை

முருகா எளிய உரை

சான்றோர்கள் கூடியுள்ள நல்லவையில் நல்ல கருத்துகளை அவர்கள் உள்ளத்தில் பதியுமாறு எடுத்துரைக்க முடியாதவர்கள், எத்தனை நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும் உலகிற்கு எவ்விதப் பயனும் இல்லாதவர்களே ஆவர்.

• நல்லவையுள் நன்கு செலச்சொல்லாதார் = சான்றோர் அவையில் கருத்துகளைப் பதிய வைக்க முடியாதவர்,• பல்லவை கற்றும் பயமிலரே = பல நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயனற்றவரே.

மு.வரதராசன்

நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

பரிமேலழகர்

நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர். (அறிவார் முன் சொல்லாமையின் கல்வியுண்மை அறிவாரில்லை என்பதாம். இனிப் 'பயமிலர்' என்பதற்கு, 'கல்விப் பயனுடையரல்லர்' என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.

Meaning in English

Though many things they've learned, yet useless are they all, To man who cannot well and strongly speak in council hall

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout