வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
vALoTen vankaNNa rallArkku nUloTennuNNavai anjsu pavarkku
Mandhagini Iniyan
பொருள் / உரை
முருகா எளிய உரை
நெஞ்சுரமும் துணிவும் இல்லாத கோழைகளின் கையில் இருக்கும் வாளினால் பயனில்லாதது போல, நுண்ணறிவாளர்கள் நிறைந்த அவையைக் கண்டு அஞ்சி நடுங்குபவர்கள் கற்றுள்ள நூல்களாலும் எந்தப் பயனும் இல்லை.
• வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடென் = துணிவில்லாத கோழைகளுக்கு வாளினால் என்ன பயன்?• நுண்ணவை அஞ்சுபவர்க்கு நூலொடென் = அறிஞர் அவையைக் கண்டு அஞ்சுவோருக்கு நூல்களால் என்ன பயன்?
மு.வரதராசன்
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.
பரிமேலழகர்
வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு என் - அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு? (இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?
Meaning in English
To those who lack the hero's eye what can the sword avail Or science what, to those before the council keen who quail





