Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 723

பொருட்பால்அங்கவியல்73. அவையஞ்சாமை

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத்து அஞ்சா தவர்.

pakaiyakattus sAvAr eLiyar ariyaravaiyakat tanjsA tavar

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

போர்க்களத்தில் பகைவர்களுக்கு அஞ்சாமல் போரிட்டு உயிரை விடத் துணியும் வீரர்களை உலகில் எளிதாகக் காணலாம்; ஆனால் சான்றோர்கள் நிறைந்த அவையில் அஞ்சாமல் நின்று நல்லவற்றை எடுத்துரைக்கும் அறிஞர்கள் மிக அரிதானவர்களே ஆவர்.

• பகையகத்துச் சாவார் எளியர் = போர்க்களத்தில் அஞ்சாமல் உயிரைத் தியாகம் செய்வோர் பலர்,• அவையகத்து அஞ்சாதவர் அரியர் = சான்றோர் அவையில் அஞ்சாமல் பேச வல்லவர்கள் மிகச் சிலரே.

மு.வரதராசன்

பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

பரிமேலழகர்

பகையகத்துச் சாவார் எளியர் - பகையிடை அஞ்சாது புக்குச் சாவவல்லார் உலகத்துப் பலர்; அவையகத்து அஞ்சாதாவர் அரியர் - அவையிடை அஞ்சாது புக்குச் சொல்ல வல்லார் சிலர். ('அஞ்சாமை', 'சாவார்' என்பதனோடும் கூட்டி, அதனால் 'சொல்ல வல்லார்' என்பது வருவித்து உரைக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் அவை அஞ்சாரது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.

Meaning in English

Many encountering death in face of foe will hold their ground; Who speak undaunted in the council hall are rarely found

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout