கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்.
kaRRAruL kaRRAr enappaTuvar kaRRArmunkaRRa selassollu vAr
Thirukkural
பொருள் / உரை
முருகா எளிய உரை
கற்றறிந்த சான்றோர்களின் முன்னிலையில் அச்சமின்றி நின்று, தாம் கற்றவற்றை அவர்கள் மனம் ஏற்குமாறு தெளிவாக எடுத்துரைக்க வல்லவரே, கற்றவர்கள் எல்லாரிலும் மேலான தலைசிறந்த அறிஞராகப் போற்றப்படுவார்.
• கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் = அறிஞர் முன் தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ள உரைப்பவர்,• கற்றாருள் கற்றார் எனப்படுவர் = கற்ற அறிஞர்கள் எல்லாரிலும் மேலான அறிஞராகப் போற்றப்படுவார்.
Murugaa simple commentary
The one who can stand fearlessly in the presence of learned scholars and clearly explain what they have learned so that their minds accept it, will be praised as the foremost scholar superior to all who have learned.
• Those who speak what they learned before the learned so that it is conveyed = One who speaks what they have learned before scholars so that their minds grasp it,• Will be called learned among the learned = Will be praised as a scholar superior to all learned scholars.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.
பரிமேலழகர்
கற்றாருள் கற்றார் எனப்படுவர்- கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று உலகத்தாரால் சொல்லப்படுவார்; கற்றார் முன் கற்ற செலச் சொல்லுவார் - கற்றார் அவைக்கண் அஞ்சாதே தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும் வகை சொல்ல வல்லார். ( உலகம் அறிவது அவரையே ஆகலின் அதனால் புகழப்படுவாரும் அவர் என்பதாம்.)
Parimelazhagar
Those who are called learned among the learned, they will be spoken of by the people of the world as having learned well among all the learned; those who speak what they have learned so that it reaches the learned before them, those who are able to speak the things they have learned without fear in the assembly of the learned in a way that their minds accept them. (Since the world knows only them, the meaning is that those who are praised on that account are also they.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.
Meaning in English
Who what they've learned, in penetrating words heve learned to say, Before the learn'd among the learn'd most learn'd are they

