Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 721

பொருட்பால்அங்கவியல்73. அவையஞ்சாமை

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்.

vakaiyaRintu vallavai vAysOrAr sollintokaiyaRinta tUymai yavar

Srinivasan Govindarajan

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொற்களின் நுட்பமான வகைகளை உணர்ந்த தூய நல்லறிஞர்கள், அவையின் தன்மையை அறிந்து, பெரும் புலவர்கள் நிறைந்த வலிமையான அவையிலும் கூட பயத்தினால் வாய் தடுமாறிப் பிழைபடப் பேச மாட்டார்கள்.

• சொல்லின் தொகையறிந்த தூய்மையவர் = சொற்களின் வகைகளை உணர்ந்த தூய நல்லறிஞர்கள்,• வகையறிந்து வல்லவை வாய்சோரார் = அவையின் வகையை அறிந்து சான்றோர் அவையிலும் அச்சத்தால் வாய் தடுமாற மாட்டார்கள்.

மு.வரதராசன்

சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.

பரிமேலழகர்

வகை அறிந்து வல்லவை வாய் சோரார் - கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை அறிந்து வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தான் வழுப்படச் சொல்லார்; சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் தொகையெல்லாம் அறிந்த தூய்மையினை உடையார். (இருந்தாரது வன்மை அவைமேல் ஏற்றப்பட்டது. 'வல்லவை' என்பதற்கு, தாம் 'கற்றுவல்ல நூற்பொருள்களை' என்று உரைப்பாரும் உளர். 'அச்சத்தான்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'சொல்லின் தொகை' 'தூய்மை' என்பவற்றிற்கு (குறள் 711) மேல் உரைத்தாங்கு உரைக்க.)

சாலமன் பாப்பையா

சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.

Meaning in English

Men, pure in heart, who know of words the varied force, The mighty council's moods discern, nor fail in their discourse

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout