கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து.
kaRRaRintAr kalvi viLangkum kasaTaRassoRRerital munnar izhukku
Kaushik Kadayam
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொற்களைக் குற்றமற ஆராய்ந்து பொருளைத் தெளிவாக உணரும் அறிஞர்கள் கூடியிருக்கும் அவையில்தான், பல நூல்களையும் கற்றுத் தேர்ந்த ஒருவரின் கல்விச் சிறப்பு யாவர்க்கும் மிகச் சிறப்பாக விளங்கித் தோன்றும்.
• கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து = குற்றமறச் சொற்களை ஆராய்ந்து உணரும் அறிஞர்கள் மத்தியில்,• கற்றறிந்தார் கல்வி விளங்கும் = பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவரின் கல்விச் சிறப்பு ஒளிவீசித் தோன்றும்.
மு.வரதராசன்
குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.
பரிமேலழகர்
கசடு அறச் சொல் தெரிதல் வல்லாரகத்து - வழுப்படாமல் சொற்களை ஆராய்தல் வல்லார் அவைக்கண் சொல்லின்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் - பல நூல்களையும் கற்று அவற்றின் ஆய பயனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும் விளங்கித் தோன்றும். ('சொல்லின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஆண்டே சொல்லுக என்பதாம்.)
சாலமன் பாப்பையா
சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.
Meaning in English
The learning of the learned sage shines bright To those whose faultless skill can value it aright





