Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 716

பொருட்பால்அங்கவியல்72. அவையறிதல்

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

ARRin nilaitaLarn taRRE viyanpulamERRuNarvAr munnar izhukku

Alankode VS Gokul

பொருள் / உரை

முருகா எளிய உரை

அகன்ற பல்துறை அறிவின் மெய்ம்மையை உணர்ந்த சான்றோர்களின் முன்னே பேசும்போது பிழை நேருமானால், அது நற்பண்பில் நிலைபெற்ற ஒருவன் தன் நெறியிலிருந்து தவறி கீழே வீழ்ந்து அழிவதைப் போன்ற பெருங்கேடாகும்.

• வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு = பல்துறை அறிவுடைய சான்றோர் முன் பேச்சில் பிழை நேர்வது,• ஆற்றின் நிலைதளர்ந்தற்று = நன்னெறியில் நின்றவன் நிலைதவறி வீழ்வதைப் போன்றதாகும்.

மு.வரதராசன்

விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.

பரிமேலழகர்

ஆற்றின் நிலை தளர்ந்தற்று - வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்; வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - அகன்ற நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின் மெய்ம்மையை உணரவல்லார் அவைக்கண் வல்லானொருவன் சொல் இழுக்குப்படுதல். (நிலை தளர்ந்து வீழ்தல் 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும்' (குறள்.24) காத்தொழுகியான்,பின் இழுக்கிக் கூடா ஒழுக்கத்தினால் பயன் இழத்தலே அன்றி இகழவும்படும் என்பதாம். இதனான் அதன்கண் இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.

Meaning in English

As in the way one tottering falls, is slip before The men whose minds are filled with varied lore

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout